Contact us on 020 8617 9343 roh@theroh.org
  • Donating white cane
  • Donation of tools to affected farmers by MP Sritharan
  • Donation of tools to affected farmers by MP Sritharan
  • Donation of agricultural tools to affected people
  • Promoting war affected people in Kandaavali with Banana tree cultivation
  • Promoting Banana cultivation in war torn villages
  • Flood relief aid in Batticalo by ROH
  • FREE EYE TEST BY DR SIVAMOHAN, WHICH CARRIED BY NAMBIKKAI OLI.
  • International Widows’ Day Gathering.
  • Website Under Construction!
  • வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் திரு ரூபராஜ் சத்தியசீலராஜா இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு 02-03-14
  • இவ்வாண்டு நம்பிக்கை ஒளியின் மற்றுமோர் திட்டமான இலவச பாடசாலைப்பைகள், பாதணிகள், அப்பியாசப் புத்தகங்கள் ஆகியவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் அவர்களால் 13/03/14 அன்று வழங்கப்பட்டது.
  • பா உ பா. அரியநேந்திரன் அவர்களால் 13/03/14 அன்று இலவச பாடசாலைப்பைகள், பாதணிகள், அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
News - செய்திகள்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிவுருவாக்கலுக்கு உதவும் கற்றல் உபகரணங்களை வழங்கல்
  • `நம்பிக்கை ஒளி நிறுவனம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள கிராமங்களையறிந்து அக்கிராமங்களின் எதிர்கால அறிவுருவாக்கலுக்கு கல்வி முதன்மை வகிக்கின்றது என்பதைக் கருத்தில் கொண்டு அத்தேவைகளுக்கு உதவும் வகையிலும் நல்லதொரு கல்விச்சமூகத்தினை உருவாக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவும் அம்மாணவர்க்குரிய கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இவ்வடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு/ மேற்கு மாவளையாறு கைலன் வித்தியாலயம், படையாண்டவெளி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மற்றும் கன்னங்குடா கண்ணகி வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் 125 மாணவமாணவிகளுக்கு புத்தகப்பை, அப்பியாசப்புத்தகங்கள், பேனாக்கள்,காலணிகள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்விவலயப் பணிப்பாளர் சிறீநேசன் தொழில் வலுவூட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் A. ஜெயதரன், மட்டக்களப்பு, உளநலப்பிரிவைச் சேர்ந்த மாவட்டப்பொது சுகாதாரப் பரிசோதகர், சின்னத்தம்பி தவேந்திரன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உணவு, மருந்து பரிசோதகர் சிவசேகரம் சிவகாந்தன் மற்றும் S சிறீதரன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். திரு பா. அரியநேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த நான்கு வருடங்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையிலும் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி நிறுவனம் உதவி செய்து வருவது தாம் அறிந்ததே எனவும் இந்த வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய கிராம மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு புத்தகப்பை, அப்பியாசப்புத்தகங்கள், பேனாக்கள், காலணிகள் என்பவற்றை வழங்கியமை வரவேற்கத்தக்கது எனவும் இவ்வாறான கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவியமைக்கு நம்பிக்கை ஒளி நிறுவனத்திற்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இது போன்ற உதவிகளுக்கான தேவை மேன்மேலும் உள்ளது என்பதையும், இதனைவிட சுயதொழில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தேசத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களையும் மக்களையும் வேண்டிக் கொண்டார் http://youtu.be/Wqzomjk6-cU

    17 Mar 2014 20:42pm
  • எமது ஆதரவில் இயங்கிவரும் `வன்னி விழிப்புலன் அற்றோர்` சங்கத்தின் ஊடாக 20 வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.
  • கண்பார்வை மிகவும் பாதிப்புக்குள்ளான, அல்லது முற்றிலும் இழந்த மக்களின் வாழ்வில் வெள்ளைப்பிரம்பு மிகப்பெரிய நம்பிக்கையையும் புனர்வாழ்வையும் கொடுக்கக் கூடியது. அது மட்டுமல்ல வெள்ளைப்பிரம்பானது கண்களில் பாதிக்கப் பெற்றவர்களின் அடையாளமாகவும் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்கு சுயமாகப் பயணிக்க ஓர் வழித்துணையாகவும் விளங்குகிறது. ஒக்டோபர் 15 ஆம் திகதி சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான நம்பிக்கையொளி நிறுவனத்தின் முகாமைத்துவத்தின் கீழ் செயற்பட்டுவருவதும் கிளிநொச்சி/ பரந்தனில் அமைந்துள்ளதுமான வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது, விழிப்புலனிழந்த சங்க அங்கத்தவர்கள் இருபது பேருக்கு வெள்ளைப்பிரம்பு 07/02/2014 அன்று வழங்கப்பட்டது. 07/02/2014 அன்று காலை 10 மணிக்கு சங்கத்தின் தலைவர் திரு ரூபராஜ் சத்தியசீலராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக முன்னாள் அரச அதிபரும், மகாதேவா சிறுவர் இல்லப் பொறுப்பாளருமாகிய திரு இராசநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி குடும்பப் புணர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் விவேகானந்தா பிறேம்குமார் அவர்களும், மற்றும் பரந்தன் மெதடிஷ் மிஷன் அருட்தந்தை ரிச்சர்ட் அவர்களும், சுபாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் வரவேற்புரையை தர்சன் வழங்கத் திரு ரூபராஜ் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து வாழ்த்துரையை திரு பாலேஸ்வரன் அவர்களும் நன்றியுரையை சங்கத்தின் செயலாளர் தென்னக்கோன் சரத் அவர்களும் ஆற்றினர்.

    23 Feb 2014 18:05pm
  • 12 ஜனவரி 2014 இல் மருத்துவர் சிவரூபன் தலைமையில் இலவசக் கண்சிகிச்சை முகாம்!
  • இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் நமது நிறுவனத்தின் சேவை தொடரவே செய்கிறது. மருத்துவர் சிவரூபன் ஒழுங்குபடுத்தலில் 12 ஆம் திகதி ஜனவரி மாதம் காலை 9 மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை நடாத்தப்பெற்ற கண் பரிசோதனை முகாம் முல்லைத்தீவில் மிகவும் சிறப்பாகவே நடந்தேறியிருக்கிறது. மாமூலை, பூதன்வயல், குமாரபுரம், முல்லைநகரம், ஹிஜ்ஜிராபுரம், நீராவிப்பிட்டி, முள்ளியவளை ஆகிய கிராமங்கள் உள்ளடங்கிய, குறிப்பாக போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் மிகுந்த பாதிப்புக்குள்ளான மக்களே இந்த சேவையினால் தங்கள் கட்புலனுக்கான தேவையை சீர் செய்ய இந்த முகாமிடல் கைகொடுத்திருக்கிறது. ஏறக்குறைய 130 பொதுமக்களுக்கு இலவச கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த மக்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடி வழங்கவும் நாம் முன்வந்து இருக்கிறோம்.

    12 Feb 2014 10:46am
more...
Our events
நம் நிகழ்வுகள்
  • மார்ச் மாதம் 1ம் திகதி பெக் தியேட்டர் இல் `மறு பிறவி` குறுந்தகடு வெளியீட்டு விழா
  • `மறு பிறவி` என்ற பெயரைத் தாங்கிவரும் குறுந்தகடு வெளியீட்டு விழாவை ஜெ அவர்களும் நம்பிக்கையொளியின் ஏனைய நிகழ்வை பிரபல GTV தொகுப்பாளர் ஜெகன் அவர்களும் தொகுத்து வழங்கவுள்ளனர்.நடனங்கள், பாடல்கள், நாடகம் எனப் பலவிதமான கலைநிகழ்வுகளுடன் சோபை தர இருக்கும் இந்த நிகழ்வானது 01/03/2014 அன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது. மாலை 5 மணிக்கே மண்டபம் திறக்கப்பட்டுவிடும். இதற்கான நுழைவுச் சீட்டுகளை காரியாலயத்தில் மட்டுமல்ல கீழ்வரும் இணயத்தள முகவரியிலும் பெற்றுக் கொள்ள முடியும். www.becktheatre.org.ukநிகழ்வு நடைபெறும் முகவரி BECK THEATRE GRANGE ROAD HAYES MIDDX UB3 2UE

    21 Feb 2014 17:35pm
  • நம்பிக்கை ஒளி தலைமைச் செயலக திறப்பு விழா - வெம்பிளி
  • நம்பிக்கை ஒளி அலுவலகத் திறப்புவிழாஇடம்: Unit G05 Courtenay Road, Eastlane Business Park Wemley,HA9 7NDகாலம்: 18.03.2012 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பி.ப.3 மணி. நம்பிக்கை ஒளி தலைமை அலுவலகத் திறப்பு விழா வரும் (18.3.12) ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருப்பதால் அவ்வேளை தாங்களும் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி. நம்பிக்கை ஒளி. Charity No:1146115 Tel:02086179343 Email:roh@theroh.org

    02 Sep 2012 12:56pm
more...
Join our donators to celebrate your kids’ Birthday with helpless Tamil orphan kids!

உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விப்போம் !

more>>
Do your loved one’s death anniversary with a charity event to help living ones

உங்கள் அன்பானவரின் நினைவு நாளில் தானமாய் கொஞ்சம் தாயக துயர் துடைப்போம் !

more>>


Connecting Families Do your charity one to one !

நேரடியாக உறவுகளை தொடர்பாடி உங்கள் உதவிகளை செய்வீர் !

more>>